×

மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் கலெக்டர் திறந்து வைத்தார் கலசப்பாக்கம் அருகே 3 நாட்களுக்கு

கலசபாக்கம், ஏப். 30: கலசபாக்கம் அருகே மிருகண்டா அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 95 கன அடி தண்ணீரை 3 நாட்களுக்கு பாசனத்திற்காக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையில் மொத்த கொள்ளளவு 22.97. இதில் தற்போது 11.97 அடி நீர்மட்டம் உள்ளது. இந்நிலையில் விவசாய பாசனத்திற்காக 3190.96 ஏக்கர் விவசாயிகள் பயனடையும் விதத்தில் வினாடிக்கு 94 கன அடி அளவு தண்ணீரை பாஸ்கர பாண்டியன் நேற்று திறந்து வைத்தார்.
நேற்று முதல் வரும் 2ம் தேதி வரை பாசனத்திற்காக மூன்று நாட்கள் திறந்து விடப்பட்டுள்ளது. கலசபாக்கம் வட்டத்தில் சுமார் 6500 எக்டேர் பரப்பளவில் தற்போது விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர்கள் கோவிந்தராசு, ராஜகணபதி, பிடிஓக்கள் வேலு, அண்ணாமலை, தாசில்தார் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நல்லான் பிள்ளை பெற்றான் பகுதியில் ₹2.42 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

The post மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் கலெக்டர் திறந்து வைத்தார் கலசப்பாக்கம் அருகே 3 நாட்களுக்கு appeared first on Dinakaran.

Tags : Mrigantha Dam ,Kalasapakkam ,Bhaskara Pandian ,Thiruvannamalai District ,Mrikanda dam ,
× RELATED கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...